Tuesday, June 5, 2012


நிலவையே 8ட்டிப் பிடித்த மனிதன் சாதாரண விஷயங்களில் சிக்கிக் கொண்டு தலைகுனிகிறான்.
உயரங்களை 8ட்டுவதை விட குழிகளையே பார்த்து நொந்து போகிறான்.

ஆனால் சிகரங்களை மட்டுமல்ல, நம்மைப் படைத்த கடவுளையும் 8ட்டிப் பிடிக்க நம்மால் முடியும்
என்கிறது வேதம்.

ஏனென்றால் சிரிக்கவும் சிந்திக்கவும் கூடிய ஒரே உயிரினமான நாம் கடவுளின் சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறோம்.

கடவுளுடன் உறவாட உருவாக்கப்பட்ட நாம், அவருக்குப் பிரியமாக வாழ்வதை விட அவரைப் பிரிந்து வாழ்வதையே
விரும்புகிறோம்.

மனிதன் கடவுளை 8ட்டிப் பிடிப்பது கடினம் என்பதால் கடவுள் மனிதனைத் தேடி மனிதனாக உலகத்துக்கு வந்தார்.

நம்மைப் புரிந்து கொண்டு, நமக்காக உயிரையே தந்து அன்பு செய்யும் அந்தக் கடவுளை 8ட்டிப் பிடித்தால் உடல், மனம்,
உறவுகள் மற்றும் ஆன்மீகத்தில் ஏற்படும் தடைகளைப் படிகளாக்கி சிகரங்களை 8ட்டலாம்.

இதை உறுதியாக நம்பி அனுபவிக்கும் நாங்கள் உங்களை ஒரு குழுவாக வந்து 8ட்டிப் பார்த்ததில் மகிழ்ச்சி.

உங்கள் நட்பைத் தொடர எங்களுக்கு ஆவல். நீங்கள் சிகரங்களை 8ட்டிப் பிடிக்க இயேசுவின் பெயரால் வாழ்த்துகிறோம்.

2012.
The Concerts:

8th Morning - CSI school - Hosur
8th Afternoon - Bethel School - Hosur

10th Morning - Methodist Church - Hosur
10th Afternoon - CSI Church - Hosur

Monday, June 4, 2012

மாதிரி விளம்பரம்

எட்டு

எட்டு

சிகரத்தை 8ட்டிப் பிடி என்று இளைஞர்களை உற்சாகப்படுத்த
YFC India  அனுப்பும் இசைக்குழு எட்டு.

பாடல்கள், குறு நாடகங்கள் என்று கலகலப்பாக இருக்கும் இந்தக் குழுவின் நிகழ்வுகள், புதிய பாடல்கள், படங்கள் என்று இந்த வலைப்பூவை
கதம்பமாக்க திட்டமிட்டிருக்கிறோம்.